தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு.. அலர்ட் கொடுத்து அலறவிடும் வானிலை மையம்

Published : Apr 22, 2026, 03:51 PM IST

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

PREV
16
கோடை வெயில்

தமிழகத்தில் கோடை வெயில் பிச்சு ஊதறி வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே பயப்படுகின்றனர். அந்த அளவுக்கு பல்வேறு இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் வெயில் எப்படி இருக்கும் என சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.

26
டெல்டா மாவட்டங்கள் மழை எச்சரிக்கை

வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில், மரத்வாடா முதல் குமரிக்கடல் வரை உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களான தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

36
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்

அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

46
ஏப்ரல் 25 மழைக்கு வாய்ப்பு

மேலும் ஏப்ரல் 25 முதல் 28 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

56
வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி அதிகரிக்கும்

இன்று முதல் ஏப்ரல் 26 வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். மேலும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

66
சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories