தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதாவது தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் சுமார் 46 ஆயிரம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2.85 லட்சம் ஆசிரியர்கள், 17 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் அரசு துறைகளில் யாராவது ஒருவர் புதிதாக அரசு பணியில் சேர்ந்தால், அவருடைய அனைத்து வகை கல்வி சான்றிதழ்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி இது உண்மைதானா என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அந்த ஆய்வில் சான்றிதழ்கள் அனைத்தும் உண்மை என்று தெரிய வந்த பிறகே அவர் அரசு ஊழியராக அங்கீகாரம் செய்யப்படுவார்.