TASMAC: தமிழகத்தில் ஆண்டுக்கு 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 4800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தினமும் சுமார் 100 கோடிக்கு அளவுக்கும், தீபாவளி மற்றும் பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் பல நூறு கோடிக்கும் மது விற்பனையாகிறது. இந்த மதுபான கடைகளை அரசு எடுத்து நடத்தி வந்தாலும் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கின்றன.
26
ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை
அதாவது ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுகிறது. குறிப்பாக திருவள்ளூவர் தினம், குடியரசு தினம், மிலாது நபி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மட்டும் விடுமுறை விடப்படுகிறது. அதாவது திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மிலாது நபி, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 8 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை கிடைக்கும்.
36
சட்டப்பேரவை தேர்தலுக்கு மூன்று நாட்கள் விடுமுறை
அதுமட்டுமல்லாமல் அந்தந்த மாவட்டங்களில் கோயில், மசூதி, தேவாலய திருவிழா நாட்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதேபோல் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மே 01ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25ll(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
56
எச்சரிக்கை மீறி விற்றால் கடும் நடவடிக்கை
மேலும் FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 01.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மே தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் நடவடிக்கை விற்பனை விதிகளின்படி கடுமையான எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
66
மே 4ம் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை
அதேபோல் தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.