தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் கடைகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
நவ நாகரீக காலத்தில் நாளுக்கு நாள் மதுபான விற்பனை அதிகரித்து வருகிறது. திரைமறைவில் மதுபானம் குடித்த காலங்கள் எல்லாம் மலையேறிவிட்டது. மதுபானம் குடிப்பது தான் தற்போது பேஷனாகி விட்டது. மதுபானம் அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மதுபான கடைகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் 2014ஆம் ஆண்டில் 6,835 மதுபான கடைகள் இருந்தன, கடந்த 10 ஆண்டுகளில் இது படிப்படியாகக் குறைந்து 5,329 ஆக உள்ளது. 2024 ஏப்ரல் மாதம் மேலும் 500 கடைகள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 4,829 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் இயங்கி வருகிறது.
24
மதுபான விற்பனை- கொட்டும் பணம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபான விற்பனை மூலம் அரசு கணிசமான வருவாய் ஈட்டுகிறது. :2024-2025 நிதியாண்டு: டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனை வருவாய் ரூ.48,344 கோடி ஆக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட ரூ.2,488 கோடி அதிகமாகும். குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விஷேச நாட்களில் மதுபான விற்பனை பல நூறு கோடிகளை தாண்டும். எனவே அரசுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் அட்ஷய பாத்திரமாக டாஸ்மாக் கடைகள் உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவள்ளுவர் தினம் - ஜனவரி 15, குடியரசு தினம் - ஜனவரி 26, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம் - மே 1, சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15,
34
டாஸ்மாக் - விடுமுறை
நபிகள் நாயகம் பிறந்த நாள் (மிலாது நபி), காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2, ஆகிய தினங்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது. அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிட்டு அறிக்கையில், இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
44
சுதந்திர தினம் - டாஸ்மாக் கடைகள் விடுமுறை
வருகின்ற 15.08.2025. வெள்ளிக்கிழமை அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள்,
FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள் / மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 15.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்