ஆசிரியர்ளே எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு.. தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு.. கடைசி தேதி எப்போது?

Published : Dec 24, 2025, 10:58 AM IST

Higher Education Department: தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 2025-26ஆம் ஆண்டு பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
14
ஆசிரியர்கள் பொது கலந்தாய்வு

உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) இணையவழியில் இன்று முதல் ஜனவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24
பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி

இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

34
ஜனவரி 5ம் கடைசி நாள்

அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல்,கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) இன்று முதல் 2026ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

44
இணைய வழியில் விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.dcetransfer.in மற்றும் www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியிலும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.tndotetransfer.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories