கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! டிசம்பர் 30-ம் தேதி விடுமுறை.! என்ன காரணம் தெரியுமா?

Published : Dec 24, 2025, 09:19 AM IST

Trichy Local Holiday: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. 

PREV
15
ஸ்ரீரங்கங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கங்கத்தில் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

25
சொர்க்கவாசல் திறப்பு

மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு வரும் டிசம்பர் 30-ம் தேதி செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் வருகை தருவார்கள் என்பதால் அன்றைய தினம் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

35
உள்ளூர் விடுமுறை

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு டிசம்பர் 30ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

45
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இந்த விடுமுறையானது பள்ளிகள், கல்லூரிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
ஜனவரி 24ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 2026-ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் செயல்படும். இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories