பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! ரேஷன் கடைகளுக்கு 23 நாட்கள் விடுமுறை!

Published : Dec 12, 2025, 08:45 AM IST

தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டுக்கான ரேஷன் கடை விடுமுறை நாட்களை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. பொங்கல், தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகள் உட்பட மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
15
ரேஷன் கடைகள்

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் 7 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரத்து 572 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

25
2026 ரேஷன் கடைகள் விடுமுறை நாட்கள்

இந்நிலையில், 2025ம் ஆண்டு முடிய இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில் 2026ம் ஆண்டில் எந்தெந்த நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.

35
தமிழ் புத்தாண்டு

அதாவது ஜனவரி 1ம் தேதி (வியாழக்கிழமை) ஆங்கில புத்தாண்டு, ஜனவரி 15ம் தேதி (வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகை, ஜனவரி 16ம் தேதி திருவள்ளூர் தினம் (வெள்ளிக்கிழமை), ஜனவரி 17ம் தேதி உழவர் தினம் (சனிக்கிழமை), ஜனவரி 26ம் தேதி (திங்கள்கிழமை) குடியரசுத் தினம், பிப்ரபரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசம், மார்ச் 19ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி) (வியாழக்கிழமை), மார்ச் 21ம் தேதி (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை, மார்ச் 31ம் தேதி (செவ்வாய் கிழமை) மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3ம் தேதி (வெள்ளிக் கிழமை) புனித வெள்ளி, ஏப்ரல் 14ம் தேதி (செவ்வாய் கிழமை) தமிழ் புத்தாண்டு ஆகிய தினங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

45
தீபாவளி பண்டிகை

மேலும் தொடர்ந்து, மே 1ம் தேதி (வெள்ளிக் கிழமை) தொழிலாளர் தினம், மே 28ம் தேதி பக்ரீத் பண்டிகை (வியாழக் கிழமை), ஜூன் 26ம் தேதி (வெள்ளிக் கிழமை) மொஹரம் பண்டிகை, ஆகஸ்ட் 15ம் தேதி (சனிக்கிழமை) சுதந்திர தினம், ஆகஸ்ட் 26ம் தேதி (புதன் கிழமை) மிலாடி நபி, செப்டம்பர் 4ம் தேதி (வெள்ளிக் கிழமை) கிருஷ்ண ஜெயந்தி, செப்டம்பர் 14ம் தேதி (திங்கள் கிழமை) விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2ம் தேதி (வெள்ளிக் கிழமை) காந்தி ஜெயந்தி, விஜயதசமி, அக்டோபர் 19ம் தேதி (திங்கள் கிழமை) ஆயுத பூஜை, அக்டோபர் 20ம் தேதி (செவ்வாக் கிழமை) விஜயதசமி, நவம்பர் 8ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தீபாவளி பண்டிகை, டிசம்பர் 25ம் தேதி (வெள்ளிக் கிழமை) கிறிஸ்துமஸ் ஆகிய நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

55
மொத்தம் 23 நாட்கள் விடுமுறை

மேலும், பொது வினியோகத் திட்டத்தின் கீழான அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் தொடர்பான அவசியம் சார்ந்து மேற்கண்ட விடுமுறை நாட்கள் குறித்து தேவைக்கேற்ப மாவட்ட நிர்வாகம் அல்லது உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனரகத்தால் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories