மேலும் உயிரிழந்த மிஸ்பா பாத்திமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு காரில் புதுச்சேரி சென்ற 10 மாணவர்கள் சென்னை திரும்பும்போது போட்டி போட்டு காரை அதி வேகத்தில் இயக்கியதால் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கியது கோவை அபினந்தன்(29), நெல்லையை சேர்ந்த செண்பக விநாயகம், நவியா அனைவரும் ஒரே கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.