குளிருக்கு இடையே சென்னையில் திடீர் மழை.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுது? வானிலை மையம் வார்னிங்

Published : Jan 24, 2026, 08:18 AM IST

Rain: தமிழகத்தில் நிலவி வந்த கடும் பனிப்பொழிவு குறைந்து, தற்போது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. 

PREV
15
கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிபொழிவு காரணமாக காலை நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். அந்த அளவுக்கு பனிபொழிவு நிலவி வருகிறது. இதனால் விமான சேவைகள் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காலை நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்று வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் உறைபனி நிலவி வந்தது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

35
இன்று 7 மாவட்டங்களுக்கு வார்னிங்

அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

45
சென்னையில் மழை

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதாவது கோயம்பேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டு, ஈக்காட்டுத்தாங்கல், பெரியமேடு, புரசைவாக்கம், அம்பத்தூர், அசோக்நகர், புழல், மேடவாக்கம், பெங்குடி, வேளச்சேரி, பள்ளிக்கரணை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

55
அடுத்த 3 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் மழை

இதனிடையே அடுத்த 3 மணிநேரத்திற்கு அதாவது காலை 10 மணிவரை 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மிதமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories