அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு! மீண்டும் தேர்வு எப்போது? மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்!

First Published | Dec 12, 2024, 12:57 PM IST

Half Yearly Exam Postponed: தமிழகத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் 21 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறையை தொடர்ந்து அரையாண்டு தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Northeast Monsoon

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்கள் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அந்த வகையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

Tamilnadu Heavy Rain

தற்போது தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இரவு முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதையும் படிங்க: School Holiday: பொங்கலுக்கு முந்தைய நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மொத்தம் 6 நாட்கள் லீவு!

Tap to resize

School Holiday

இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை
திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், தூத்துக்குடி, சேலம், திருப்பத்தூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 21 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. 

Half Yearly Exam Postponed

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில்: கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு நடக்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: புயல் வெள்ள நிவாரண நிதி! அரசு கொடுக்கும் ரூ.5,000 எப்போது கிடைக்கும்? வெளியான குட்நியூஸ்!

Half Yearly Exam

ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகே  நடைபெறும் என கூறப்படுகிறது. அதாவது விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை காரணமாக ஜனவரி மாதம் அரையாண்டு தேர்வு நடைபெறும் போது ஒத்திவைக்கப்பட்ட தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது.

Latest Videos

click me!