சென்னையில் விடாமல் கொட்டும் மழை.! எல்கேஜி மாணவர்களுக்கு கூட விடுமுறை அளிக்காத தனியார் பள்ளி

First Published | Dec 12, 2024, 12:01 PM IST

தமிழகத்தில் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் சில தனியார் பள்ளிகள் செயல்படுவதால் பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

RAIN CHENNAI

தமிழகத்தில் கன மழை

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழையானது நேற்று இரவில் இருந்து பெய்து வருகிறது. பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சென்னையை பொறுத்தவரை விடாமல் மழை கொட்டுகிறது. 

tamilnadu rain

இன்றும் மழை எச்சரிக்கை

இதனால் வாகன போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து வருகிறது. மேலும் இன்று அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில்  கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

private school

மழையிலும் செயல்பட்ட பள்ளிகள்

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னையிலும் அதிகாலை 5.30 மணிக்கே பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆனால் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று வழக்கம் போல் பள்ளியானது செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்கு வந்துள்ளனர். இதனால் பெரும்பாலான மாணவர்களின் உடைகள் ஈரமாகவே காட்சி அளிக்கிறது.

private school working

பெற்றோர்கள் வாக்குவாதம்

சென்னை மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில், இந்த உத்தரவை மீறி பள்ளி செயல்படுவதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கும் படி எந்தவித உத்தரவும் வரவில்லையென தெரிவிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மழையில் நனைந்து குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்குமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

school education

விளக்கம் கேட்டு நோட்டீஸ்.?

இதனிடையே சென்னையில் மழையானது தொடர்ந்து பெய்து வரும் நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்காமல் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

Latest Videos

click me!