செம்பரம்பாக்கம் நீர் வெளியேற்ற வாய்ப்பு
இதனிடையே தற்போது தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக செம்பரம்பாக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது 713கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. எனவே இன்று இரவுக்குள் 22 அடியை செம்பரம்பாக்கம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நீரின் வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதன் படி 22 அடியை செம்பரம்பாக்கம் எட்டும் பட்சத்தில் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்ற வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அடையார் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது