Youth Employment
வேலை தேடும் இளைஞர்கள்
ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்து வேலை தேடி அலைகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு உதவித்தொகை உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்பினை தமிழக அரசு உருவாக்கி வருகிறது.
tamilnadu government
தமிழக அரசு
இந்நிலையில் சொந்தமாக தொழில் செய்ய திட்டமிடுபவர்களுக்காக சுய தொழில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களில் யூடியூப் சேனல் தொடங்கி அதன்மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இதனை கருத்தில் கொண்டு புதிய யூடியூப் சேனல் தொடங்க விரும்புபவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
Youtube Channel training
யூடியூப்பில் மார்க்கெட்டிங் செய்வது எப்படி.?
சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல் சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு - ஆன்லைன் மார்க்கெட்டிங் - டொமைன் பெயர் ஹோஸ்டிங் - இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் ஆகியவை தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. மற்றும் விதிகள். இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண், பெண், திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job vacancy
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
பயிற்சியில் பங்குப் பெறும் ஆண், பெண், திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இப்பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!
Own Youtube Channel training programme
முன்பதிவு அவசியம்
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.9543773337 / 9360221280 முன்பதிவு அவசியம் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.