Tamilnadu ration card : தமிழ்நாட்டில் 37 ஆயிரம் முழு நேரம் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.
இந்த அட்டை உள்ளவர்களுக்கு நியாயவிலைக்கடைகளில் உணவுப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவ கையில் அரிசி, சக்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது. மேலும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு ரேஷன் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. எனவே புதிய அட்டை கேட்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
25
magalir urimai thogai
ரேஷன் அட்டைக்காக காத்திருக்கும் மக்கள்
ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் புதிதாக ரேஷன் அட்டை பெறுவதற்கு பழைய அட்டையில் உள்ள பெயர்கள் நீக்கம் செய்ய வேண்டும், எனவே இதற்காக உணவு பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு தினந்தோறும் அலைய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் ரேஷன் அட்டையில் பெயரை சேர்க்க நீக்கம் செய்ய சூப்பர் வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
35
Ration card name delete
பெயரை சேர்க்க, நீக்க சூப்பர் சான்ஸ்
அதன் படி வருகிற சனிக்கிழமை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளதாகவும், அந்த முகாமில் ஓரே இடத்தில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டு ரேஷன் அட்டையில் உள்ள குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
45
Ration card name delete Special camp
சென்னையில் சிறப்பு முகாம் தேதி அறிவிப்பு
அதன்படி ஏப்ரல் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 12.04.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல். பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
55
Ration card name delete
ரேஷன் கடை மீதான புகாரையும் தெரிவிக்கலாம்
மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள்,
தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கைமேற்கொள்ளப்படும். எனவே சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.