டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்.! தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு

First Published | Jan 8, 2025, 3:41 PM IST

அரசு பணியில் இணைய வேண்டும் என்ற ஆர்வத்தில் தேர்விற்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு தமிழக அரசு சார்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TNPSC

டிஎன்பிஎஸ்சி தேர்வு

தனியார் துறையில் பல லட்சம் வேலை வாய்ப்புகள் குவிந்துகிடக்கும் நிலையில் அரசு பணி தான் கனவாக நினைத்து பல ஆயிரம் இளைஞர்கள் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்படுகிறது . இந்த தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு அரசு பணியும் வழங்கப்படுகிறது. இதன் படி இந்த 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

TNPSC EXAM

இலவச பயிற்சி வகுப்பு

இந்தநிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தனியார் பயிற்சி நிலையங்களில் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து படிக்கும் நிலையானது உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக இலவசமாகவே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்,

சென்னை மாவட்ட, கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர். இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 10-01-2025 முதல் துவங்கப்படவுள்ளது. 

Tap to resize

tnpsc exam

தகுதி என்ன.?

இப்பயிற்சி வகுப்பானது வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு ஆகும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப்படிவ நகலுடன் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் மேற்குறிப்பிட்ட நாளில் சென்னை -32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக ஏதாவது ஒரு வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள். 

tnpsc

கூடுதல் விவரங்களுக்கு

மேலும்,  விவரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம், சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்ரஷ்மி சித்தார்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest Videos

click me!