தனியார் பள்ளிகளுக்கு டப் கொடுக்க போகும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.! ஜனவரி 19 முதல் 5 நாட்களுக்கு.!

Published : Dec 27, 2025, 09:04 AM IST

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்த, பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன்படி, ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

PREV
14
அரசு பள்ளி மாணவர்கள்

இன்றைய பள்ளி மாணவர்கள் தான் நாளைய எதிர்காலம் என்ற அடிப்படையில் ஆரம்ப கல்வி தான் மாணவர்களின் அடிப்படை கல்வியாக உள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எந்த கல்வியை கற்றுக்கொள்கிறார்களோ அதே போன்ற கல்வியானது அரசு பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு போட்டியாக அரசு பள்ளி மாணவர்களும் தேர்வில் அதிக மதிப்பெண்களை வாங்கி வருகிறார்கள். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

24
அரசு பள்ளி ஆசிரியர்கள்

அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் உயர் கல்வியில் பயிலும் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் இலவச சைக்கிள் போன்ற பல்வேறு அசத்தலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

34
ஜனவரி 19 முதல் 23-ம் தேதி வரை உறைவிட பயிற்சி

இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து மாவட்டக் கல்விநிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் கோவை, மதுரை, வேலூர், திண்டுக்கல், சேலம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜனவரி 19 முதல் 23-ம் தேதி வரை உண்டு உறைவிட பயிற்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலப் பாடம் கற்பிக்கும் 1991 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளனர்.

44
ஆசிரியர்களுக்கு உரிய நாள்களில் பணிவிடுப்பு

இந்த பயிற்சியில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள், பயிற்சி வழங்கும் கருத்தாளர்கள் பட்டியல் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் மாவட்டக் கல்விஅலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆசிரியர்கள் உரிய அட்டவணையின்படி பயிற்சி மேற்கொள்ளதேவையான முன்னேற்பாடு களை மேற்கொள்ள வேண்டும். இதுதவிர பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களை 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலப் பாடப் புத்தகங்களை உடன் கொண்டுவர அறிவுறுத்த வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு உரிய நாள்களில் பணிவிடுப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories