தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அரசு வேலையில் சேர்ந்து வருகின்றனர்.
24
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்
தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு பணியிடங்களின் நியமனம் வெளிப்படையாக நடந்து வருவதால் மாநிலம் முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். பெரும்பாலானோர் மற்ற வேலைகளுக்கு கூட செல்லாமல் முழு நேரமாக அர்சு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையே குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
34
குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி
இந்நிலையில், குரூப்-2 போட்டித்தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-II, IIA 2025-ம் ஆண்டு 645 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலை போட்டித்தேர்வு மற்றும் எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ். போன்ற மத்திய அரசு போட்டித்தேர்வு முகமை டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யூ.எஸ்.ஆர்.பி., எம்.ஆர்.பி. போன்ற மாநில அரசு போட்டி தேர்வு முகமை, பொதுத்துறை நிறுவனம் மற்றும் முப்படைகளின் காலிப் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பு அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக சிறந்த பயிற்றுநர்களை கொண்டு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும் அதிகளவிலான வகுப்பு தேர்வுகள் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள் அந்தந்த மாவட்ட அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சி வகுப்பு அலுவலக வேலைநாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி வகுப்புகள்
சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து மாவட்டங்களிலும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் மத்திய, மாநில அரசு பணியிடங்களுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பிரத்யேக இணைய தளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in மென் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.