கூடுதல் மதிப்பெண் வேண்டுமா? 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நல்ல சான்ஸ்! தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

Published : Jun 04, 2025, 11:56 AM ISTUpdated : Jun 04, 2025, 12:14 PM IST

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியிடப்பட்டன. விடைத்தாள் நகல் கோரிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

PREV
14
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. இதில், தமிழகத்தில் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதிய நிலையில் 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் குறைந்த மதிப்பெண் பெற்ற மற்றும் தேர்ச்சியடையாத மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர். தொடர்ந்து, விண்ணப்பித்த மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து, விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

24
தேர்வுத்துறை இயக்குநர்

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் லதா வெளியிட்ட அறிவிப்பில்: பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கான நகல் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

34
மறுகூட்டலுக்கு விண்ணப்பம்

மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஜூன் 5, 6, 7-ம் தேதிகளில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

44
ஒப்புகை சீட்

விண்ணப்ப கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகை சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே, மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிய முடியும் என கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories