குஷியில் வாகன ஓட்டிகள்! சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை!

Published : Jun 04, 2025, 09:51 AM IST

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலைகள் சீரமைக்கப்படும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை. சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் அதிகரிப்பதாக மனுதாரர் தெரிவித்திருந்தார்.

PREV
14
சுங்கச்சாவடி

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை எலியார்பத்தி சுங்க சாவடி, தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய 2 சுங்க சாவடிகளிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. 2011ம் ஆண்டு முதல் மத்திய அரசு அனுமதியுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

24
கூடுதலாக கட்டணம் வசூல்

இந்த சுங்கச்சாவடியில் மத்திய அரசு நிர்ணயித்தை தொகையை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாதம்தோறும் 11 கோடி ரூபாய் வசூலாகும் நிலையில், 30 லட்சம் ரூபாய் மட்டும் தான் பராமரிப்பு பணிக்காக செலவிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு பராமரிப்பு பணியும் செய்யப்படவில்லை.

34
உயர் நீதிமன்ற மதுரை கிளை

இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து மற்றும் பேருந்துகள் பழுதாகின்றன. எனவே மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள், நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சேதமடைந்த சாலைகள் முழுமையாக சீரமைக்கும் வரை எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் வாகன ஒட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

44
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைப்பது, மரம் வளர்ப்பது உள்ளிட்ட வசதிகளை முறையாகச் செய்யும் வரை சுங்கக் கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும், மேலும் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 18ம் தேதி ஒத்திவைத்தனர். இந்நிலையில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்த நிலையில், புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் இன்று கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுங்கச்சாவடியின் குறுக்கே லாரியை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories