தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் பாஜக- அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விருந்து வைத்து அசத்தியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தூத்துக்குடியில் உதிரி பாகங்கள் தயாரிக்க காரணம் விமான நிலையம், துறைமுகம் ஆகியவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.