Published : Dec 01, 2024, 10:11 AM ISTUpdated : Dec 01, 2024, 10:26 AM IST
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்ததா இல்லையா என்ற குழப்பம் நிலவுகிறது. வானிலை ஆய்வு மையம் புயல் கரையை கடந்துவிட்டதாகவும், தனியார் வானிலை ஆய்வாளர் இன்னும் கடலில்தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலு அதிகரித்து காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என வலுவானது. எப்போது புயலாக உருவாகும் என வானிலை மையத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியது. மேலும் கடலிலேயே ஒரே இடத்தில் நகராமல் நீடித்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது, மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை புரட்டிப்போட்டது.
25
cyclone
காற்றோடு கொட்டிய மழை
முதலில் ஃபெஞ்சல் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் திடீரென ஏற்பட்ட மாற்றத்தால் புதுச்சேரி பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன் படி நேற்று காலை முதல் சென்னையில் மழை கொட்டித்தீர்த்தது. காற்றோடு பெய்த மழையில் மரங்கள் முறிந்து விழுந்தது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நேற்று மாலை கரையை ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.
35
Rain
ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்
இது தொடர்பாக தென்மன்டல் வானியை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், நேற்று மாலை 5.30 மணிக்கு ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியதாகவும் இரவு 10 மணி முதல் 11.30க்குள் கரை கடந்து புதுச்சேரி அருகே நிலை கொண்டதாக தெரிவித்தார். அதே நேரத்தில் புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் நகராமல் நிலை கொண்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 50 செ.மீட்டர் மழையும். புதுவையில் 46 செ.மீட்டர் மழை பெய்த்தாக தெரிவிக்கப்பட்டது.
45
weather man
கரையை கடக்கவில்லை புயல்
இந்தநிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், ஃபெஞ்சல் புயல் இன்னும் திறந்த கடலில்தான் உள்ளது. கரையைக் கடக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதற்கு செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கவும் என கூறியுள்ளார், இந்த ஃபெஞ்சல் புயல் இன்று மதியம் - மாலை வரை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.
55
Cyclone fengal rain updates
விடாமல் தொடரும் மழை
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்கள் தான் இன்றைய ஹாட் ஸ்பாட் என தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் இன்று மாலை வரை அங்கேயே இருக்கும் என கூறியுள்ளார்
இந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இன்று பலத்த மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் சற்று நேரத்தில் புதுச்சேரியும் வரலாற்றுச் சிறப்புமிக்க 500 மிமீ மழை அளவைக் கடக்கும் என கூறியுள்ளார்.