டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு வெளியான ஷாக் தகவல்

First Published | Dec 1, 2024, 9:26 AM IST

Tasmac shops closed : டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்கும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

TASMAC SHOP

அதிகரிக்கும் மது விற்பனை

வெளிநாட்டிற்கு இணையாக மாறிவரும் கலாச்சாரம் காரணமாக மது குடித்தால் தான் ஸ்டைல், பேஷனாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் மது குடித்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நிலையில் தற்போது மது குடிப்பதை வீடியோவாக எடுத்து ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் நள்ளிரவு நேர பார்ட்டிகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் கலந்த கொண்டு மது அருந்துகின்றனர்.  நாளுக்கு நாள் அதிகரிக்கும் மது விற்பனை காரணமாக நாடு முழுவதும் மது விற்பனையால் பணம் கொட்டோ கொட்டு என கொட்டுகிறது. 
 

liquor shops

டாஸ்மாக் - கொட்டும் வருமானம்

தமிழகத்தை பொறுத்தவரை  4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் நாளொன்றுக்கு 100 முதல் 120 கோடியும் வருடத்திற்கு சுமார் 45ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை செய்யப்படுகிறது. எனவே தமிழக அரசு மக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிதியை வாரி வழங்கும் குடோனாகவே டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.  இந்தநிலையில் புயல் மழை என வந்தாலும், தீபாவளி, பொங்கல் என விஷேச நாட்கள் வந்தாலும் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்பதே இல்லை.
 

Tap to resize

tasmac

டாஸ்மாக் விடுமுறை நாட்கள்

அந்த வகையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன் படி, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் மட்டும் விடுமுறை விடப்படுகிறது. இதை தவிர சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தடுக்கும் வகையில் அந்த, அந்த மாவட்டங்களில் குறிப்பிட்ட கோயில் விஷேச நாட்கள், குரு பூஜை  நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

thoothukudi

3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சவேரியார் ஆலய வருடாந்திர விழாவானது இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் பல மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் சாவேரியார் ஆலய  வட்டாரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள், சொகுசு ஹோட்டல் பார்கள் இன்று (டிசம்பர் 1ம் தேதி) முதல் டிசம்பர் 3ம் தேதி வரை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 

tasmac

தேவாலய திருவிழா - டாஸ்மாக் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள உத்தரவின் படி  நாகர்கோவில் ரயில்வே ரோடு, கோட்டார் சந்திப்பு, பாறைக்கால் மடையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் டிசம்பர் 3ம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கடையை திறந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!