எந்த பகுதியில் புயல் கரையை கடக்கும்
இந்த ஃபெங்கல் புயல் டெல்டா மாவட்டங்களில் கரையை கடக்கும், புயலாக உருமாறி பர்மா, வங்கதேசம் நோக்கி செல்லும் என கூறப்பட்டது. அடுத்ததாக சென்னை- புதுவை இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் புயல் கரையை கடக்கும் இடம் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த புயலின் காரணமாக சென்னைக்கு மழை எப்படி இருக்கும் எனவும் தேதி வாரியாக குறிப்பிட்டுள்ளார். சென்னைக்கு தெற்கே புயல் கரையை கடப்பதால் சென்னைக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.