ஃபெங்கல் புயல் சென்னையை பாதிக்குமா? எப்போது கரையை கடக்கும்.?

First Published | Nov 27, 2024, 11:32 AM IST

Chennai Fengal Cyclone Alert : வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஃபெங்கல் புயல் சென்னைக்கு அருகே வரும்போது வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

heavy rain in tamilnadu

வெளுக்கும் வட கிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் மத்தியில் தமிழகத்தில் தொடங்கியது. தொடங்கும் போதே அதிரடி காட்டியது. அப்போதே சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் மழையின் பாதிப்பு குறைந்தது. ஆனால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்தநிலையில் இந்த வட கிழக்கு பருவமழையின் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல் புயல் உருவாகவுள்ளது.

Fengal cyclone

இன்று மாலை புயலாக உருவெடுக்கும்

அந்த வகையில்  இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று மாலை புயலாக வலுபெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இந்தப் புயலுக்கு ஃபெங்கல் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஃபெங்கல் புயல் வட கடலோர மாவட்டங்களை நெருங்கும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

Tap to resize

Fengal Cyclone

சென்னையை நெருங்கும் புயல்

தற்போது சென்னையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்றும் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே ஃபெங்கல் புயல் வரும் போது இது வலு குறையும் எனவும்  கரையை கடக்கும் போது புயலாக இருக்காது எனவும், வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  

Fengal Cyclone latest update

மாமல்லபுரம் பகுதியில் புயலின் கண்

இந்த ஃபெங்கல் புயல் குறிப்பாக புதுச்சேரி- சென்னை இடையே கரையை கடக்கும் எனவும் சென்னைக்கு தெற்கில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கரையை கடக்கும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்பாக்கம், மாமல்லபுரம் பகுதியில் புயலின் கண் பகுதி இருக்கும் என வானிலை மைய மேப் மூலம் தெரியவருகிறது. 

Rain Delta districts

நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும்

நவம்பர்  29ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் தமிழக கடற்கரை நெருங்கும் போது புயலாக இருக்கும், இதனை தொடர்ந்து 30 ஆம் தேதி சென்னை அருகே தெற்கு பகுதியில் புயல் வரும் போது வலு குறையும் எனவும் அப்போது மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கும் எனவும், குறிப்பாக தமிழகத்தில் சென்னை உட்பட டெல்டா மாவட்டங்களில் டிசம்பர் 1ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்

Latest Videos

click me!