Tamilnadu Weather Update: ஜூலை 22 வரை உஷார் மக்களே.. பகலில் அனல் காற்று.. இரவில் மழையா? இன்றைய வானிலை எப்படி இருக்கும்?

Published : Jul 19, 2026, 08:17 AM IST

Tamilnadu Rain: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்து வரும் நிலையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

PREV
15
ஐந்து இடங்களில் சதம் அடித்த வெயில்

தமிழகத்தில் கோடை மாதம் முடிந்த பிறகும் பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்டுவதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். மற்றொரு புறம் அனல் காற்று வீசி வருகிறது. நேற்று மதுரை, மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், தஞ்சாாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் ஜூலை 22 வரை இயல்பைவிட வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

25
இன்று வானிலை எப்படி இருக்கும்?

அதாவது இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

அதேபோல் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் ( மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

35
40 முதல் 50 கி.மீட்டர் காற்று வீசும்

மேலும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

45
ஜூலை 22 வரை எச்சரிக்கை

இன்று முதல் ஜூலை 22ம் தேதி உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் (Hot and Humid) இருக்கும் நிலையில் கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

55
சென்னையில் இன்று மழை எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது.

Read more Photos on
click me!

Recommended Stories