தமிழகத்தில் தொங்கு சட்டசபை வருமா? வந்தால் யார் ஆட்சி அமைப்பார்?

Published : Apr 29, 2026, 03:05 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தொங்கு சட்டசபை அமையும். 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுப்பார், அப்போது சிறிய கட்சிகள் கிங் மேக்கராக மாறி பேரம் பேசும்.

PREV
14

முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில் தமிழக வரலாற்றி இதுவரை இல்லாத வகையில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் ஆளும் திமுகவும், எதிர்கட்சியான அதிகமுகவும் ஒரு வித பீதியுடன் இருந்து வருகின்றனர். இதற்கு காரணம் விஜய்யின் அரசியல் வருகை தான். சுமார் 12.5 லட்சம் புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் எங்கே சென்றுள்ளன என்பதுதான் இந்த தேர்தலில் புரியாத புதிராக இதுவரை இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் தொங்கு சட்டசபை அமைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

24

அப்படி தொங்கு சட்டசபை என்றால் என்ன? அப்படி அமைக்கும் பட்சத்தில் என்ன நடக்கும்? என்பதை பார்க்கலாம். தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க குறைந்தது 118 இடங்கள் வேண்டும். இதை தான் மெஜிக் நெம்பர் என்று கூறுவார்கள்.

34

இந்த தேர்தல் முடிவுகளில் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த நிலையைத்தான் தொங்கு சட்டசபை என்று கூறுவார்கள். உதாரணமாக A கட்சி அல்லது கூட்டணி 100 இடங்களிலும், B கூட்டணி கட்சி மற்றும் கூட்டணி 100 தொகுதிகள் வெற்றி பெறுவதாக வைத்துக்கொள்வோம். C கட்சி 34 தொகுதிகளில் வெற்றி பெறுவதாக வைத்துக்கொள்வோம். இதில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதுதான் தொங்கு சட்டசபை கூறுகிறார்கள். அப்படி தொங்கு சட்டசபை அமைக்கும் பட்சத்தில் முழு அதிகாரமும் ஆளுரின் கைக்கு செல்லும்.

44

அதாவது பெரும்பான்மை இல்லாத நிலையில் யாரை முதலில் ஆட்சி அமைக்க அழைப்பது என்ற தனிப்பட்ட அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பார். சட்டப்பேரவையில் எனக்கு மெஜாரிட்டி இருப்பதை A அல்லது B நிரூபிக்க வேண்டும். அந்த நேரத்தில் C யாருடன் செல்கிறாரோ கிங் மேக்கராக உருவெடுப்பார்கள். இவர்கள் தங்களது ஆதரவை அளிப்பதற்காக, துணை முதல்வர் பதவி, முக்கிய அமைச்சரவை இலாக்காக்கள் அல்லது சில சலுகைகளை பேரம் பேசுவார்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் இது போன்று நடந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் இது போன்று நடந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories