புதிய சாதனை! டாஸ்மாக் வருமானத்தை ஓவர்டேக் செய்ததா பதிவுத்துறை? எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

Published : Dec 07, 2024, 09:31 PM IST

Tamil Nadu Registration Department: தமிழக பத்திரப்பதிவுத்துறையில் நவம்பர் 2024ல் ரூ.1984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாத வருவாயை விட ரூ.301.87 கோடி அதிகம். டிசம்பர் 5ம் தேதி ஒரே நாளில் ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

PREV
15
புதிய சாதனை! டாஸ்மாக் வருமானத்தை ஓவர்டேக் செய்ததா பதிவுத்துறை? எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?
TASMAC

தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை கொட்டிக்கொடுக்கும் துறையாக இருப்பது டாஸ்மாக்  மற்றும் பத்திரப்பதிவுதுறையாகும். குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 100 கோடிக்கு மேல் மது விற்பனையாகிறது. அதுவும் பண்டிகை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம். 200 கோடியை மிஞ்சிவிடும். 

25
Registration Department

அதேபோல் பத்திரப்பதிவுத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்படுகிறது. இந்நிலையில் இதுவரையில் இல்லாத வகையில் 2024 நவம்பர் மாதத்தில் ரூ.1984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

35
Minister Moorthy

இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில்: தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கிய துறையாக விளங்கிவரும் பதிவுத்துறையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் 2024 நவம்பர் மாதத்தில் ரூ.1984.02 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

45
Register Office

இதனை கடந்த வருடம் நவம்பர் மாதம் அடைந்த வருவாயுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த நவம்பர் 2024ம் மாதத்தில் கூடுதலாக ரூ.301.87 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

55
Tamil Nadu Registration Department revenue

மேலும் கடந்த டிசம்பர் 5ம் தேதி அன்று கார்த்திகை மாத சுப முகூர்த்தநாளில் ஆவணங்கள் அதிக அளவில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் சிறப்பு நிகழ்வாக பொதுமக்கள் பயன் பெறும் வகையில் முன்பதிவு வில்லைகள் 100 லிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி பொதுமக்கள் உயர்த்தப்பட்ட முன் ஆவணப்பதிவு வில்லைகளை பயன்படுத்தி கடந்த டிசம்பர் 5ம் தேதி அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories