TN School Holidays Dec 3: கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் ஒரு மாவடட்த்தில் பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிட்வா புயல் தாக்கம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதேபோல் சென்னை முழுவதும் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
சென்னை உள்பட மேற்கண்ட இந்த 4 மாவட்டங்களிலும் இன்றும் விட்டு விட்டு மழை பெய்தது. நாளையும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் நாளை (டிசம்பர் 3) 3 மாட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
24
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம்
அதாவது சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். இதேபோல் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவள்ளூரில் முதலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பின்பு கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.
34
திருவண்ணாமலைக்கும் விடுமுறை
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளுர் விடுமுறைக்கு பதிலாக டிசம்பர் 13ம் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சென்னையில் கனமழை எச்சரிக்கை உள்ளதால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (டிசம்பர் 3) நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மறு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னையை தவிர மற்ற இடங்களில் செம்ஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.