ஆனால் 2025ம் ஆண்டு திமுக அரசு வெறும் பொங்கல் பரிசு மட்டுமே வழங்கியது. ரொக்கப் பணம் ஏதும் வழங்கவில்லை. ஆனால் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வரும் பொங்கலுக்கு பரிசுத்தொகுப்புடன் ரொக்கப்பணமும் சேர்த்து திமுக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பரிசு ரகசியம்
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'பொங்கல் பரிசுடன் ரூ.5,000 ரொக்கப்பணம் வழங்க வேண்டும்' என திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதியிடம் பொங்கல் பரிசு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், 'பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு என்ன பரிசு கொடுப்போம் என்பது ரகசியம். அதை இப்போது சொல்ல முடியாது. அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்' என்று தெரிவித்தார்.