சொன்னதை செய்து காட்டிய ஸ்டாலின்.! திமுக தொண்டர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

Published : Dec 23, 2025, 02:00 PM IST

சாலை விபத்தில் உயிரிழந்த உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மு.இராமதாஸ், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரவணகுமார் ஆகியோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்.

PREV
14
திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரையில் ஜூன் 1ம் தேதி அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும் என்று அறிவித்திருந்தார்.

24
10 லட்சம் நிவாரணம்

அந்த வகையில், விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூரைச் சேர்ந்த திருமதி சரிதா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.முத்தமிழ்செல்வன் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன் - திருவாரூர் மாவட்டத்தைச் எம்.விக்னேஷ் - கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி - காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.ராம்பிரசாத் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரண்ராஜ் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாசம் - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.மேகலிங்கம் - சேலம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.முருகன் ஆகிய 10 குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

34
சாலை விபத்தில் உயிரிழந்த திமுகவினருக்கு நிவாரணம்

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி அன்று விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த கழக உறுப்பினரான மு.இராமதாஸ் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை - திருச்சி பை-பாஸ் பாலத்தின்கீழ் சர்வீஸ் சாலையில் நின்றிருந்தபோது கார் மோதிய விபத்தில் சிக்கியும், ஆகஸ்ட் 26ம் தேதியன்று நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக உறுப்பினரான கு.சரவணகுமார், வெண்ணந்தூர், மடம் பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் சிக்கியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

44
கழக தலைவர் ஸ்டாலின்

இவ்விரண்டு குடும்பங்களுக்கும் குடும்ப நிவாரண நிதியாக, தலா ரூபாய் 10 இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர், விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மு.இராமதாஸ் மனைவி திருமதி சௌமியா அவர்களிடமும் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரவணகுமார் மனைவி திருமதி சங்கீதா அவர்களிடமும் இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் வழங்கினார்.

Read more Photos on
click me!

Recommended Stories