டிஜிட்டல் அரஸ்ட் மோசடி.! பல கோடி ரூபாய் சுருட்டிய வட மாநில கும்பல்- கொத்தாக தூக்கிய தமிழக போலீஸ்

Published : May 13, 2025, 11:43 AM IST

டிஜிட்டல் கைது மோசடி மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யும் வட மாநில கும்பலை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ₹81,68,000 மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

PREV
16

நவீன காலத்திற்கு ஏற்ப மோசடி நடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது. முகநூலில் நண்பர்கள் போல் போலி ஐடியை உருவாக்கி அவசர தேவைக்கு பணம் வசூலித்து ஏமாற்றப்பட்ட நிலையில், தற்போது போலீசார் பெயரையை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி டிஜிட்டல் அரஸ்ட் என கூறி பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறிவருகிறது. அந்த வகையில் வட மாநில மோசடி கும்பலை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

26

தமிழ்நாட்டு பொதுமக்களை குறிவைத்து வட இந்தியாவில் இருந்து செயல்படும் ஒரு சைபர் மோசடி கும்பலை தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது இதுவரை 2025 ஆம் ஆண்டில் மட்டுமே இதுபோன்ற மோசடிகள் தொடர்பாக தேசிய சைபர் குற்றப் புகார் போர்டல் மூலம் 350 க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகளை இந்தப் பிரிவு கைது செய்துள்ளது. இந்த வழக்கில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாதிக்கப்பட்டவருக்கு, பெங்களூரு காவல்துறையைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரியை போல தன்னை அடையாளம் காட்டிகொண்டு ஆள்மாறாட்டம் செய்து,

36

பாதிக்கப்பட்டவர் மனித கடத்தல் மற்றும் வெளிநாட்டு வேலை மோசடி தொடர்பான வழக்கில் தொடர்புடையவர் என்று பொய்யாகக் கூறி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். மேலும் மோசடி செய்பவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டினர். அவ்வாறு சிக்கிக் கொள்ளாமல் இருக்க பணத்தை மாற்றும்படி பாதிக்கப்பட்டவரை வற்புறுத்தினர். கைது செய்யப்படுவதற்கு பயந்து போன பாதிக்கப்பட்டவர் இது ஒரு மோசடி என்பதை உணரும் முன்பே 81,68,000 பரிமாற்றம் செய்தார்.

 இதனையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், புகார் அளித்ததையடுத்து  சென்னை சைபர் கிரைம் பிரிவு தலைமையகம் மேற்கண்ட வழக்கின் விசாரணையின் போது அனைத்து வங்கி கணக்குகளில் விவரங்கள் பெற்று விசாரணை செய்யப்பட்டது.

46

மோசடி பரிவர்த்தனையில் பயன்படுத்தப்பட்ட முதல்-நிலை வங்கிக் கணக்குகளில் ஒன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த கே ஷோபனாவுக்குச் சொந்தமானது என்பது கண்டறியப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது, தனது சகோதரர் எம். சுரேஷ் தனது பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் திறக்க அறிவுறுத்தியதாகவும் ஆன்லைன் கேமிங் தொழிலுக்கு கணக்கைப் பயன் படுத்தினால் கமிஷன் கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

 சுரேஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த கால்நடைத் தீவன வியாபாரியான அவரது நண்பர் செந்தில் அவருக்கு வழிகாட்டினார் என்பதும் தெரியவந்தது அவர் லாபம் ஈட்ட வங்கிக் கணக்குகளை உருவாக்கும் யோசனையை அவருக்கு கொடுத்துள்ளார்.

56

மேலும் விசாரித்ததில் ஷோபனாவின் கணவர் கார்த்திக் சுரேஷ் அறிமுகப்படுத்திய நபரான பியூஷ் என்ற நபரைத் தொடர்பு கொண்டு ஆன்லைன் கேமிங் தொழிலில் ஈடுபட்டால் பியூஷ் வருமானத்தில் 2% லாபம் தருவதாக உறுதியளித்தார். மேலும், கார்த்திக்கிடம் வங்கிக் கணக்கைத் திறந்து, நெட் பேங்கிங்கை அமைத்து உள்நுழைவுச் சான்றுகள், 

மின்னஞ்சல் ஐடி, மொபைல் போன் மற்றும் சிம் கார்டு ஆகியவற்றை ஒப்படைக்கச் சொன்னார். பியூஷ், கார்த்திக்கை லக்னோவில் சந்திக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.கார்த்திக் மாற்றுத்திறனாளி என்பதால், அவர் தனது மனைவியின் மூத்த சகோதரர் பிரபுவிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார்.

66

அவர் அடிக்கடி வடக்கு மாநிலங்களுக்குச் செல்லும் லாரி ஓட்டுநராக இருக்கிறார். பிரபு லக்னோவுக்குச் சென்று வங்கிப் விவரங்களை பியூஷிடம் ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து, ஜனவரி 2 மற்றும் 3, 2025 அன்று, ஷோபனாவின் வங்கிக் கணக்கிற்கு ரூ12 லட்சம் பணம் மாற்றப்பட்டது மேற்கண்ட நபர்களை கைது செய்யும் போது அவர்களிடமிருந்து ஒரு மடிக்கணினி மற்றும் ஐந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 இது தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட கே.ஷோபனா எம்.சுரேஷ், எஸ்.செந்தில் குமார் மற்றும் எஸ் கார்த்திக் ராஜா ஆகியோர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் மேலும் விசாரணை நடந்து வருகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories