Governor R.N.RAVI : ஆர் என் ரவியின் பதவி காலம் முடிகிறது.! தமிழகத்தின் புதிய ஆளுநர் யார்.? யாருக்கு வாய்ப்பு.?

Published : Jun 21, 2024, 09:29 AM IST

தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவியின் பதவிகாலம் ஜூலை மாதத்தோடு நிறைவடையவுள்ள நிலையில், புதிய ஆளுநரை நியமிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.  

PREV
15
Governor R.N.RAVI : ஆர் என் ரவியின் பதவி காலம் முடிகிறது.! தமிழகத்தின் புதிய ஆளுநர் யார்.? யாருக்கு வாய்ப்பு.?

ஆளுநரும் தமிழக அரசும்

பல்வேறு சர்ச்சை கருத்திற்கு சொந்தக்காரர் ஆர்.என்.ரவி,  இவர் 1976 இல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார் மற்றும் கேரளா கேடருக்கு ஒதுக்கப்பட்டார். இவர் வெளியுறுவுத்துறையில் உளவுத்துறை அதிகாரியாக செயல்பட்டுள்ளார். மேகாலாய மற்றும் நாகலாந்து மாநில ஆளுநராக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பிறகு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை மத்திய அரசு நியமித்தது. 
 

25
RN Ravi

ஆளுநரின் சர்ச்சை கருத்து

ஆரம்பத்தில் தமிழக அரசிற்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே சுமூகமான உறவு நீடித்த நிலையில் நீட் மசோதாவை கிடப்பில் போட்ட பிறகு மோதல் தொடங்கியது. ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. இதே போன்று ஆளுநர் ரவியும் அரசு விழாக்களில் தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை கூறுவது. பட்டமளிப்பு விழாவில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை பரப்புவது என அரசியல் கட்சிகளால் குற்றச்சாட்டிற்கு ஆளானார்.  

INTJ : இந்திய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் காலமானார்.! யார் இந்த எஸ்.எம்.பாக்கர் தெரியுமா.?

35

தமிழ்நாடு டூ தமிழகம்

அடுத்ததாக தமிழக சட்டப்பேரவையில் தமிழக அமைச்சரவை  ஒப்புதல் கொடுத்த ஆளுநர் உரையை வாசிக்காமல் இரண்டு ஆண்டுகள் சட்டசபையில் இருந்து வெளியேறினார். மேலும் தமிழ்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்ற கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  தமிழ்நாடு என்று அழைத்து வந்ததை தமிழகம் என மாற்ற முயற்சித்தார். இதனால் ஏற்பட்ட கண்டனங்களை தொடர்ந்து அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். 

45
Governor RN Ravi

ஆர் என் ரவி பதவிகாலம்

தமிழக முதலமைச்சரை விட தனக்கே அதிகாரம் இருப்பது போல் அமைச்சரை பதவியில் இருந்து  நீக்கியும் உத்தரவிட்டார். ஆனால் மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தனது முடிவை வாபஸ் வாங்கினார்.இது  போன்று பல்வேறு சர்ச்சை கருத்திற்கு சொந்தக்காரரான ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. 

55

புதிய ஆளுநர் யார்.?

எனவே தமிழகத்திற்கு புதிய ஆளுநரை நியமிப்பதற்கான பணிகளை உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பாஜக மூத்த தலைவர்களை ஆளுநர் பொறுப்பில் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அதே நேரத்தில் ஆளுநர் ரவியின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாமா என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

இத்தனை பேர் செத்து இவ்வளவு மணி நேரம் ஆகுது! இன்னும் சம்பவ இடத்திற்கு வராத முதல்வர்! இறங்கி அடிக்கும் L.முருகன்
 

Read more Photos on
click me!

Recommended Stories