வங்கி கணக்குக்கு வரும் ரூ.25,000! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Published : Jun 21, 2025, 08:28 AM IST

மத்திய, மாநில அரசுகள் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. 

PREV
17
கல்வி உதவித்தொகை

கல்விக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்கள் கல்வியை தொடர வேண்டும், உயர்கல்வியில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் எந்தெந்த திட்டங்களில் என்பதை பார்ப்போம்.

27
புதுமைப் பெண் திட்டம்

தமிழக அரசின் முதன்மையான திட்டமான புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் (கலை, அறிவியல், தொழில்முறை படிப்புகள், டிப்ளமா, ஐ.டி.ஐ) சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டம் 2022 செப்டம்பர் 5 முதல் செயல்படுத்தப்பட்டு, பெண்களின் கல்வி இடைநிற்றலைத் தடுக்கவும், உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

37
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி உதவித்தொகை

அரசு/அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் முற்றிலும் விலக்கப்படுகிறது. சுயநிதி கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வருமான வரம்பு இல்லாமல் இத்திட்டம் அனைத்து ஆதி திராவிடர்/பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

47
தேசிய தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகை (NMMS)

மத்திய அரசின் என்எம்எம்எஸ் (National Means-cum-Merit Scholarship) திட்டத்தின் கீழ், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

57
யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வு

இதுதொடர்பாக தமிழக அரச வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது துணை முதலமைச்சர் அவர்களால் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 07ம் தேதி அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

67
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்

இந்நிலையில் 2023-24 க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அகில இந்திய குடிமைப் பணி தேர்வு மையத்துடன் (AICSCC) இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும்.

77
ஊக்கத்தொகை

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2025) யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து, இன்று முதல் ஜூலை 2ம் தேதி வரை விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories