அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கும் தமிழக அரசு- வெளியான குட் நியூஸ்

First Published | Jan 26, 2025, 10:59 AM IST

தமிழக அரசு ஏழை எளிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, கல்விக் கட்டணம், விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்றுக் கொள்கிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கும் தமிழக அரசு- வெளியான குட் நியூஸ்

கல்விக்கு முக்கியத்துவம்

தமிழக அரசு சார்பாக பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஏழை எளிய மாணவர்கள் கல்வியறிவு பெற வேண்டும் என இலவசமாக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. காலை மற்றும் மதிய உணவு திட்டம், இலவச பஸ்பாஸ், கல்வி உதவி தொகை போன்ற திட்டங்கள் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இது மட்டுமில்லாமல் உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்காவும் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது .

Pudhumai Penn scheme

உயர்கல்வி- அரசு நிதி உதவி

இதனால் ஏழை , எளிய மாணவர்களும் மருத்துவம், பொறியியல் என பல துறை படிப்புகளில் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பயின்று வருகிறார்கள். இது தொடர்பாக  உயர்கல்வித்துறை அமைச்சர் கோ வி.செழியன் வெளியிட்டுள்ள தகவலில்,  இந்தியாவிலேயே தமிழ்நாட்டை உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக உயர்த்தி பல்வேறு சாதனைகளைத் திராவிட மாடல் அரசு படைத்து வருகிறது.  'புதுமைப் பெண்' திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகையால் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை ஆய்வுகள் மெய்பித்துள்ளன.


school student

கல்வி செலவை ஏற்கும் தமிழக அரசு

அதேபோல மாணவர்களுக்கான 'தமிழ் புதல்வன்' திட்டத்தை செயல்படுத்தி மாணவர்கள் தங்கள் உயர்கல்வி கனவை எந்த இடையூறு இல்லாதாதவாறு சாதிக்க சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது.  இத்திட்டங்களை போலவே அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை உயர்த்தவேண்டும். உயர்கல்வி சேர்க்கையில் அவர்களுக்கான உரிய வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் எனும் நோக்கத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை  2021ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்கள்.

education scheme

1,165 கோடி ரூபாய் ஒதுக்கீடு

இதனையடுத்து  அரசாணை வெளியிடப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முன்முயற்சியின்கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவினையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. 

கடந்த நான்கு கல்வியாண்டுகளில், இத்திட்டத்தின் கீழ் 1,165 கோடி ரூபாய்க்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40,168 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில்வதில் எத்தகைய இடையூறையும் எதிர் கொண்டு விடக்கூடாது எனும் முதலமைச்சரின் அக்கறை உள்ள நடவடிக்கையினால் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது.

Higher education reservation

மாணவர்களுக்கு பயன்

குறிப்பாக தொழிற்படிப்புகளில் 35,530 பேர், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 2,382 பேர், வேளாண் படிப்புகளில் 1,369 பேர், கால்நடை மற்றும் மீன்வளம் சார்ந்த படிப்புகளில் 261 பேர். சட்டப் படிப்புகளில் 626 பேர் என மொத்தம் 40,168 அரசுப்பள்ளி மாணவர்கள் கடந்த நான்காண்டுகளில் இந்த இட ஒதுக்கீட்டினால் பயனடைந்துள்ளார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!