
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அரசு வழங்கும் கடன் உதவி திட்டங்கள் பலவிதமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை விவசாயிகள், சிறு தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டவையாக உள்ளது.
கைத்தறி நெசவாளர் கடன் திட்டம் மூலம் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நெசவாளர்களின் முதலீட்டு மற்றும் செயல்பாட்டு மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் மற்றும் நிதி உதவி மற்றும் கடன் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு நிறுவனம் (TNWDC) கடன் திட்டங்களின் மூலம்தனிப்பட்ட பெண் தொழில்முனைவோருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. சிறு தொழில்கள், கைவினைப் பொருட்கள், மற்றும் வணிக மேம்பாட்டிற்கு ₹10 லட்சம் வரை கடன். மானியங்களும் வழங்கப்படுகிறது.
வேளாண்மை மற்றும் கால்நடை கடன் திட்டங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. பயிர்க் கடன், கால்நடை வளர்ப்பு, பால் பண்ணைகள், மற்றும் வேளாண் உபகரணங்கள் வாங்குவதற்கு குறைந்த வட்டி கடன்கள். மானியங்களுடன் 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கலாம்.
கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம்:
நோக்கம்: கிராமப்புறங்களில் சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் 10 லட்சம் ரூபாய் வரை கடன், மானியங்களுடன். உற்பத்தி, சேவை, மற்றும் வணிகத் தொழில்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வருமானச் சான்று, வங்கிக் கணக்கு விவரங்கள் வழங்கப்பட வேண்டும். சாதி/சமூகச் சான்றிதழ் (BC, MBC, SC/ST-க்கு).
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்: பல திட்டங்களுக்கு ஆன்லைன் விண்ணப்ப வசதி உள்ளது ( www.tamco.tn.gov.in, www.tn.gov.in) மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாவட்ட தொழில் மையங்கள் (DIC), அல்லது அருகிலுள்ள வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்.
இதனிடையே பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(TAMCO)சார்பில் தனிநபர் கடன் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தனிநபர் கடன் திட்டத்தின் ரூ.30.00 இலட்சம் வரையிலான திட்டங்களுக்கு தனி நபர்களுக்கு சுயமாக தொழில் / வியாபாரம் செய்ய / கறவை மாடுகள் வாங்க கடன் வழங்கப்படுகிறது.
தகுதிகள் :
1. விண்ணப்பதாரர் மதவழி சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள், ஜெயினர்கள் ஆகியோர்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.
2. விண்ணப்பதார் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
3. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும்.
விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட ஆவணங்களின் நகலுடன் அந்தந்த மாவட்டபிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலஅலுவலர்கள்/ மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் / கூட்டுறவு வங்கிகளில் சமர்பிக்க வேண்டும்.
1. சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்.
2. சாதி சான்றிதழ்.
3. வருமான சான்றிதழ்.
4. உணவுபங்கீடு அட்டை (அ) இருப்பிட சான்றிதழ்.
5. ஆதார் அட்டை.
6. திட்ட அறிக்கை.
7. வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள்.
கடன் விண்ணப்ப படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் கிடைக்கும்.
1. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்/மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம்.
2. மண்டல கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.
3. மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லதுதொடக்கவேளாண்மைகூட்டுறவு வங்கி.
அளவீடுகள்
திட்டம்-1
ஆண்டுவருமானம்
ஆண்டு வருமானம் கிராமப் புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/-க்கு | மிகாது இருத்தல் வேண்டும்.
அதிகபட்ச கடன் தொகை - ரூ. 20.00 இலட்சம்
வட்டிவிகிதம் (ஆண்கள்)- ஆண்டிற்கு 6%
வட்டிவிகிதம் (பெண்கள்)- ஆண்டிற்கு 6%
திருப்பிசெலுத்தும்காலம்- அதிகபட்சம் 5 ஆண்டுகள்
திட்டம்-2
திட்டம் 1 இன் கீழ் நன்மை பெற முடியாத நபர்கள் மற்றும் ரூ.8,00,000/ வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் (கிராமபுறம்மற்றும்நகர்புறங்களுக்கு)
அதிகபட்ச கடன் தொகை - ரூ. 30.00 இலட்சம்
வட்டிவிகிதம் (ஆண்கள்)- ஆண்டிற்கு 8%
வட்டிவிகிதம் (பெண்கள்)- ஆண்டிற்கு 6%
திருப்பிசெலுத்தும்காலம்- அதிகபட்சம் 5 ஆண்டுகள்