Published : Jan 30, 2025, 08:42 AM ISTUpdated : Jan 30, 2025, 08:47 AM IST
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.15 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
ஏழை மற்றும் எளிய மக்கள் முன்னேறிடும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அதன் படி தமிழக அரசு சார்பாக நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகவும்,தனியாகவும் கடன் உதவி வழங்கப்படுகிறது. மேலும் மானியமும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தனிநபர் கடன் வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் தனிநபர் மற்றும் குழுக்கடன்கள் வழங்கி வருகிறது.
25
தனிநபர்களுக்கு கடனுதவி
சிறு தொழில் அல்லது வணிகம் செய்வதற்கு ஆண்டுக்கு 6சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் படி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO)மூலம் தனி நபர் கடன் திட்டம் ரூ.15. லட்சம் வரை வழங்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு தொழில், வியாபாரம் செய்ய தனிநபர்களுக்கு கடனுதவி வழங்கி வருவதாகவும், இந்த பணத்தை 3 முதல் 5 ஆண்டு காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.