10 ஆயிரம் நிதி உதவி திட்டம்
மேலும் நாட்டுப்புற கலைஞர்கள் பயணம் மேற்கொள்ளும் போது அவர்களின் இசைக் கருவிகள் மற்றும் தொழில் கருவிகளை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்லவும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக கிராமிய கலைஞர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இந்த நிதி உதவியை பெற உடனடியாக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழக கிராமியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இசைக்கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 500 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் உதவி தொகைக்காக விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்றவராகவும், பதிவை புதுப்பித்தவராகவும் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.