ஓய்வூதியதாரர்கள் இனி அலைய வேண்டாம்.! ஒரே நிமிடத்தில் ஆவணங்களை பெறலாம்- சூப்பர் திட்டம் அறிமுகம்

First Published | Jan 10, 2025, 8:30 AM IST

தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக புதிய கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் ஓய்வூதிய விவரங்கள், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெறலாம். டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழையும் பதிவு செய்யலாம்.

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்

அரசு ஊழியர்களின் செயல்பாட்டால் தான் அரசின் திட்டங்கள் மக்களை சென்று சேர்கிறது. அந்த வகையில் அரசிற்கும் மக்களிற்கும் பாலமாக அரசு ஊழியர்கள் உள்ளனர்.  அரசு பணியில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

அதன் படி ஆவணங்களை பெற அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் ஓய்வூதிதாரர்கள் அலையாமல் ஒரே இடத்தில் இருந்து ஆவணங்களை பெறும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 

ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பதவியேற்ற 7.5.2021 முதல் இதுவரை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு பதவிகளுக்கான 2,420 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று வழங்கப்படும் 311 பணி நியமன ஆணைகளை சேர்த்து மொத்தம் 2,731 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அகில இந்திய அளவில் தமிழ்நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் முதல் முறையாக தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய கைபேசி செயலி புதுமையான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 
 

Tap to resize

புதிய செயலி அறிமுகம்

இச்செயலி வாயிலாக, மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் /குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இச்செயலி மூலம் ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள்/ கருணை ஓய்வூதியதாரர்கள் தங்களது மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 

Government provides pension

அலைய வேண்டிய தேவை இல்லை

மாதாந்திர ஓய்வூதிய விவரம், வருடாந்திர ஓய்வூதிய அட்டவணை, வருமான வரி செலுத்துபவர்களுக்கான படிவம் 16 பதிவிறக்கம் மற்றும் அனைத்து பயனுள்ள தகவல்களும் இச்செயலியில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பெற ஆதார் எண்ணை e-KYC வாயிலாக இச்செயலி மூலம் எளிதாக பதிவு செய்யலாம்.

இந்த செயலி மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் ஒரு இலட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் மின்சார வாரிய ஓய்வூதியதாரர்கள் எளிதில் பயன்பெறும் வகையிலான இந்த புதிய செயலியினை அறிமுகப்படுத்தி, மூன்று ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ்களை வழங்கினார்.

Latest Videos

click me!