Pongal festival
பொங்கல் கொண்டாட்டம்
தமிழ் திருநாளாம் பொங்கல் பண்டிகையானது உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிக்கைக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. குறிப்பாக ஜனவரி 11ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சொந்த ஊரில் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் அரசு பேருந்து தனியார் பேருந்து மற்றும் கார்களில் புறப்பட திட்டமிட்டு உள்ளனர்.
pongal 2025
தொடர் விடுமுறை- பொதுமக்கள் குஷி
இந்த சூழ்நிலையில் பெரும்பாலானோர் பேருந்து பயணம் செய்வதை விட ரயிலில் பயணம் செய்யவே அதிக அளவு விரும்புவார்கள். அந்த வகையில் ரயில்களில் முன்பதிவானது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே முடிவடைந்துவிட்டது.
எனவே எப்போது சிறப்புயில்கள் இயக்கப்படும் என காத்திருந்த பொதுமக்களுக்கு தற்போது அசத்தலான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கும், சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கும், இதே போல சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்புரயிலானது இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Train engine
சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னை எழும்பூரில் இருந்து( ரயில் எண் 06101/06102) நெல்லைக்கு ஜனவரி 11-ம் தேதி இரவு 11 45 மணிக்கு இயக்கப்பட உள்ளது. மறு மார்க்கத்தில் ஜனவரி 12ஆம் தேதி நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் இரண்டு ஏசி பெட்டிகளும், இரண்டு முன்பதிவு பெட்டிகளும், 10 பொது இரண்டாம் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக நெல்லையை சென்று சேருகிறது.
SPECIAL TRAIN
நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்
இதே போல தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு (ரயில் எண் 06099/06100)ஜனவரி 11ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஜனவரி 12ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஏசி பெட்டிகள் மூன்றும், முன்பதிவு செய்த பெட்டிகள் 9, பொது பெட்டிகள் 6 இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக நாகர்கோவிலில் சென்று சேருகிறது
TICKET RESERVATION
மதுரைக்கு சிறப்பு ரயில்
அடுத்ததாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து (ரயில் எண் 06067/06068 )மதுரைக்கு ஜனவரி 11ஆம் தேதியும் மறுமாக்கத்தை மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஜனவரி 12ஆம் தேதி சிறப்பு முறையில் இயக்கப்பட உள்ளது. ஏசி பெட்டிகள் 11, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 6, பொதுப்பெட்டிகள் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ரயிலானது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, சேலம், கோயம்புத்தூர், பழனி வழியாக மதுரையை சென்று சேர்கிறது
TRAIN PONGAL
மதுரைக்கு சிறப்பு ரயில்- இன்று முன்பதிவு தொடக்கம்
அடுத்ததாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து (ரயில் எண் 06109/06110 ) மதுரைக்கு ஜனவரி 11ஆம் தேதியும், மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 11 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது. Super-Fast MEMU Unreserved Express Special ரயிலாக இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலானது சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரையை சென்று சேர்கிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று(10.1.2025) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.