OMNI BUS
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை
பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் இந்தாண்டு தொடர்ந்து 6 முதல் 9 நாட்கள் பொங்கல் பண்டிகைக்காக விடுமுறை கிடைக்கவுள்ளது. இதனால் சொந்த ஊரில், சொந்த கிராமங்களில் பொங்க கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதற்காக ரயில் பேருந்துகள் மற்றும் கார்களில் புறப்பட தயாராகி வருகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சென்னையில் இருந்து மட்டும் வெளியூர் சென்றிருந்த நிலையில் இந்தாண்டு இன்னும் பல லட்சம் பேர் சென்னையை விட்டு வெளியூர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
omni bus
ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம்
இதனையடுத்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அந்த வகையில் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்தும் பயணம் செய்யவுள்ளனர். இந்த நிலையில் ஆம்னி பேருந்தின் கட்டணமானது விமான கட்டணத்திற்கு இணையாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும் பயணிகள் பாதிக்காத வண்ணம் அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் கடந்த 2023 ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி 20 சதவீதம் குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.
omni bus
கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது
மேலும் வாகனங்களின் உதிரி பாகங்கள் மற்றும் டோல்கேட் கட்டணம் போன்ற பராமரிப்பு செலவுகள் உயர்ந்த போதிலும் 2023 ஆம் ஆண்டு சங்கங்கள் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தையே அன்றும் மற்றும் இன்றும் நிர்ணயித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற விழா காலங்களில் ஒரு சில பேருந்து உரிமையாளர்கள் செய்யும் தவறுகளால் அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கும் மற்றும் இத்தொழில் செய்பவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வண்ணம் அரசும் மற்றும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கமும் சேர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
omni bus
ஆம்னி பேருந்து கட்டணம் என்ன.?
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக ஆன்லைனில் அதிக கட்டணம் போடப்பட்டிருந்த நிறுவனங்களிடம் அறிவுறுத்தி சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக போட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதன்படி அவர்களும் சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்தையே பயன் படுத்தி வருகின்றனர்.
omni bus
புகார் தெரிவிக்க தொலைபேசி எண்
மேலும் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்க வேண்டிய அதிகபட்ச கட்டண விவரத்தையும் www.aoboa.co.in எங்கள் சங்க இணையதளத்திலும் வெளியிட்டுள்ளோம் அதை பயணிகள் பின்பற்றலாம் . மேலும் ஆம்னி பேருந்துகள் கட்டண சம்பந்தமான புகார்களுக்கு எங்கள் சங்க புகார் எண்- 90433 79664 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.