Birth certificate
உங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக எந்த அலுவலகங்களுக்கும் செல்லவோ வரிசையில் காத்திருக்கவோ தேவையில்லை. பிறப்புச் சான்றிதழை விரைவாகவும் எளிதாகவும் பெற ஆன்லைன் வழிமுறை உள்ளது.
How to get birth certificate?
வீட்டிலிருந்தே சில நிமிடங்களில் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்த வசதியில் சில வேறுபாடு இருக்கலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காகவே பிரத்யேகமான இணையதளம் இருக்கிறது.
birth certificate online
பிறப்புச் சான்றிதழ் பெற, தமிழ்நாடு அரசின் https://www.crstn.org/birth_death_tn/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும். அதில் பிறப்புச் சான்றிதழ் டவுன்லோட் செய்வதற்கான படிவத்தை நிரப்புங்கள்.
birth certificate download
பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோரைப் பற்றிய தகவல்கள், தொலைபேசி எண் போன்ற விவரங்களைச் சரியாகக் குறிப்பிட்டு, படிவத்தை நிரப்பியதும் பிறப்புச் சான்றிதழைப் பார்க்கவும் டவுன்லோட் செய்யவும் முடியும்.
birth certificate fee
பிறப்புச் சான்றிதழ் டவுன்லோட் செய்ய எந்தக் கட்டணமும் இல்லை. குழந்தை பிறந்து 21 நாளுக்குப் பிறகு பதிவுசெய்யப்படும்போது 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
Birth certificate name update
குழந்தையின் பெயரைக் குறிப்பிடாமல் பிறப்புச் சான்றிதழை டவுன்லோட் செய்ய முடியும். ஆனால், ஓராண்டிற்குள் குழந்தையின் பெயரைச் சேர்த்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. ஒரு வருடத்துக்கு மேல் தாமதமானால் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.