அரசு ஊழியர்களுக்கு கெடு.! ஒரு மாதம் தான் டைம் உடனே இதை செய்யனும் -அதிரடியாக பறந்த உத்தரவு

Published : Jun 13, 2025, 12:16 PM ISTUpdated : Jun 13, 2025, 12:25 PM IST

மக்களின் குறைகளைத் தீர்க்க அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று நாட்களுக்குள் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வழங்க வேண்டும், ஒரு மாதத்திற்குள் குறைகளைத் தீர்க்க வேண்டும்.

PREV
15
அரசு ஊழியர்களும் அரசின் திட்டங்களும்

அரசு ஊழியர்கள் தான் அரசுக்கும் - மக்களுக்கும் பாலாமாக உள்ளார்கள். அந்த வகையில் அரசின் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதற்கு அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது. இருந்த போதும் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நிலை தான் நீடித்து வருகிறது. இதன் காரணமாக அரசின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை தமிழக அரசு வெளியிடுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அரசாணையில், 

25
ஒரு மாதத்திற்குள் குறைகள் களைய வேண்டும்

அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாகப் பெறப்படும் குறைகளைவு மனுக்களின் பரிசீலனை குறித்து மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகள் வெளியிடப்பட்டன . அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மூன்று (3) நாட்களுக்குள் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வழங்குவதுடன், 

மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறை களையப்படல் வேண்டும். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட 14.112024-ஆம் நாளிட்ட உத்தரவின் அடிப்படையில் தலைமைச் செயலாளரின் நேர்முகக் கடிதம் வாயிலாக குறைகளைவு மனுக்களைக் கையாளுதல் குறித்தப் பல்வேறு நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தங்களைத் தவறாது பின்பற்றுமாறும், 

35
ஆட்சியர், செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்

மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்குமாறும். அனைத்துத் துறைச் செயலாளர்களும் மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தப்பட்டனர். அரசாணை மற்றும் அரசுக் கடிதங்கள் மட்டுமின்றி நீதிமன்றத் தீர்ப்புகளைக் குறிப்பிட்டுத் தொடர்ந்து அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டிருப்பினும், குறைகளைவு மனுக்களை முறையாகத் தீர்வு செய்தலில் குறைபாடுகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது என  12.02. 2025ஆம் நாளிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சுட்டிக்காட்டுகிறது. 

45
மனுக்களை பதிவு செய்திட வேண்டும்

எனவே, அரசு அலுவலகங்களில் பெறப்படும் குறைகளைவு மனுக்களைக் கையாளும்போது அரசாணைகள் மற்றும் அரசுக் கடிதங்களில் வகுத்தளிக்கப்பட்ட அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகள் தவறாது கடைபிடிக்கப்பட வேண்டும் என ஆணையிடப்படுகிறது.

நடைமுறைகளும், அறிவுறுத்தங்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்திட அனைத்து அரசு அலுவலகக்களும் அலுவலகத்தில் பெறப்படும் குறைகளைவு மனுக்களைப் பதிவு செய்திட குறைகளைவு மனுப்பதிவேடு ஒன்றினை பராமரித்தல் வேண்டும். அப்பதிவேட்டில், 

55
மனுக்கள் மீது விரைந்து தீர்வு

அம்மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்திடல் வேண்டும். அப்பதிவேட்டினை மாத இறுதியில் அவ்வலுவலகத் தலைமை அலுவலர் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து தீர்வு செய்திட ஆவன செய்திடல் வேண்டும். 

மேற்படி குறைகளைவு மனுப்பதிவேடு'; அத்துறையின் துறைரீதியிலான வார இருவார  மற்றும் மாதாந்திர ஆய்வு மற்றும் மனித வள மேலாண்மை ஆய்வுத் துறையின் வருடாந்திர ஆய்வுகளின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் ஆணையிடப்படுகிறது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories