தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு ஸ்கெட்ச்.! போக்குவரத்து துறை வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள்

Published : Apr 11, 2025, 08:58 AM IST

தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

PREV
14
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு ஸ்கெட்ச்.! போக்குவரத்து துறை வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள்

Guidelines for bus drivers and conductors : தமிழகத்தில் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஆட்டோ, கார்களில் செல்வதை விட மிக, மிக குறைவான கட்டணம், அனைத்து இடங்களுக்கும் சர்வீஸ் போன்ற காரணங்களில் மக்களின் பயன்பாடு அதிகளவு உள்ளது.

மேலும் மகளிர்களுக்கு உதவிடும் வகையில், விடியல் திட்டத்தின் கீழ் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம். இதனால் மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் வரை மக்கள் சேமிக்க முடிகிறது. இந்த நிலையில் ஒரு சில இடங்களில் பேருந்து சேவை சரியான வகையில் இயக்கப்படுவதில்லையென தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

24
Bus driver conductor

ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை

இந்த நிலையில் ஓட்டுநர் மற்றும் நடத்துகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. இதன் படி, முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவுபிறப்பித்துள்ளது.

அந்த வகையில் பேருந்து இயக்கம் தொடர்பாக கண்காணிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, பேருந்து பணிமனைகளில் தினசரி இயக்கப்பட வேண்டிய பேருந்துகளுக்கு, ஒரு நாள் முன்னதாக Control Chart - தயார் செய்து ஓட்டுனர் நடத்துனர்களிடம் கையொப்பம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

34
TNSTC bus rules

பேருந்துகள் இயக்கம்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு

அவசர தேவைகளுக்காக ஒரு நாள் முன்னதாக மாலை 5 மணிக்குள் விடுப்பு தெரிவிக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பேருந்துகளை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் அதிகம் பயணம் செய்யும் காலை மற்றும் மாலை நேரங்களான Peak Hours நேரத்தில் இயக்கப்படும் General Shift பேருந்துகளை எக்காரணம் கொண்டு Single Shift ஆக இயக்க படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகூர்த்த நாட்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும், மகளிர் விடியல் பயணம் தொடர்பான  சாதாரண கட்டண பேருந்துகள் தினந்தோறும் இயக்கப்படுவதினை உறுதிப்படுத்த வேண்டும்.

44
free bus travel

ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள்

முக்கியமாக அடிக்கடி பணிக்கு வராமல் முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுத்திடவும், Stalwart / Team Force ஓட்டுநர் நடத்துனர்களை Vacant உள்ள இடங்களில் Posting போட வேண்டும் என போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories