பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்.! 110 விதியில் அறிவிப்பு.? முதல்வருக்கு சென்ற முக்கிய கோரிக்கை

Published : Apr 11, 2025, 08:30 AM IST

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய திமுக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் அறிவிப்பு வெளியிடவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

PREV
15
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்.! 110 விதியில் அறிவிப்பு.? முதல்வருக்கு சென்ற முக்கிய கோரிக்கை

Permanent employment for part-time teachers : கல்வி தான் ஒரு மாணவனை முன்னேற்றம் செய்யும் ஆயுதமாகும். அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்கும் ஆசியர்கள் இன்று குறைவான சம்பளத்தில் பணியாற்றி வரும் நிலை நீடித்து வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் “பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஒவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்ற வாக்குறுதியை அளித்திருந்தது. 

25
Part time teachers jobs

மக்களிடம் இருந்து வரி பறிப்பு

ஆனால் இது தொடர்பாக எந்த வித நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்கவில்லைய, இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு,

பதிவுக் கட்டண உயர்வு என மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்தி ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடமிருந்து கூடுதல் வருமானத்தை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், தேர்தல் வாக்குறுதியான பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என்பதை நிறைவேற்ற தி.மு.க. அரசு மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

35
OPS statement

போராடி வரும் ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 15,000-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாதம் 12,500 ரூபாய் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்கள் இந்த சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றிக் கொண்டு வருபவர்களை நிரந்தரம் செய்வது என்பது மிகவும் நியாயமான கோரிக்கை என்பதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.

45
part time teachers

பணி நிரந்தரம் செய்திடுக

பணி நிரந்தரம் கோரிக்கையினை வலியுறுத்தி பலகட்டப் போராட்டங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதனை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டபோது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதம் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிட்டனர். இதனையடுத்து, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என பகுதி நேர ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. 

55
DMK election promise

110 விதியின் கீழ் அறிவிப்பு

தங்களுக்கான பணி நிரந்தர அறிவிப்பினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வெளியிட வேண்டுமென்று பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரமே இதில் அடங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் இதற்கான அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிட வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories