தமிழ்நாடு அரசு 2021 தேர்தல் வாக்குறுதியின்படி 5 பவுன் வரை நகைக்கடனை தள்ளுபடி செய்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். வரும் தேர்தலிலும் இதே போன்ற அறிவிப்பு வர வாய்ப்புள்ளதா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கூட்டுறவு வங்கிகளில் ஏழை மற்றும் எளிய மக்கள் பெறும் நகைக்கடன், அவர்களின் அவசர பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் ஒரு முக்கிய நிதி வசதியாக உள்ளது. இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன தமிழ்நாட்டில் இந்தக் கடன்கள் குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுகின்றன.
எனவே அவசர தேவைகளுக்காக நகைகளை அடகு வைக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை அரசியல் கட்சிகள் வெளியிடும்.
24
நகைக்கடன் தள்ளுபடி- திமுக உறுதி
திமுக 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால், ஐந்து பவுன் (40 கிராம்) வரையிலான தங்க நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதி, குறிப்பாக ஏழை மக்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு உதவுவதற்காக அறிவிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில் 2021 செப்டம்பர் 13 அன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 31 மார்ச் 2021 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட ஐந்து பவுன் அல்லது அதற்கு குறைவான தங்க நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.
34
நகைக்கடனை தள்ளுபடி செய்த அரசு
தமிழக அரசு அறிவித்த இந்த உத்தரவால் சுமார் 13.12 லட்சம் பேர் பயனடைந்தனர், மொத்தம் 4,818.88 கோடி ரூபாய் மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதே போல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2,755.99 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன, இதனால் 1,17,617 குழுக்கள் பயனடைந்தன.
இந்தத் தள்ளுபடி, குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட மக்களுக்கு நிவாரணமாக அமைந்தது.திமுகவின் தங்க நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி, 2021 தேர்தலில் முக்கியமான ஒன்றாக இருந்தது மற்றும் ஆட்சிக்கு வந்த பிறகு இது பெருமளவு நிறைவேற்றப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்தாலும், செயல்படுத்தலில் சில குறைபாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்று, 31.03.2021 வரை நிலுவையிலிருந்த நகைக் கடன் ரூ. 6,000 கோடி தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது.
அதன்படி, 11.70 இலட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவிற்குத் தள்ளுபடிச் சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கும் அரசியல் கட்சிகள் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிடுமா.? என மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.