இலவசமாக மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி.! விடுமுறைக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Published : Apr 22, 2025, 02:23 PM IST

தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச விளையாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஏப்ரல் 25 முதல் மே 15 வரை பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும். 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பயன்பெறலாம்.

PREV
15
இலவசமாக மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி.! விடுமுறைக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Summer sports training camps : பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து சுமார் 50 நாட்கள் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விடுமுறை நாளை மாணவர்கள் பயனுள்ள வகையில் மாற்றி அமைக்க பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக மாணவர்களுக்கு இலவசமாக விளையாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.  இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

25
Holiday free sports training

மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை மாவட்டத்திற்கான 2025-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம்' வரும் 25.04.2025முதல் 15.05.2025வரை தொடர்ந்து 21 நாட்களுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது. 

இந்த பயிற்சி முகாமில் தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, டென்னிஸ்.மட்டைபந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், டைவிங்க்,வளைகோல்பந்து மற்றும் குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகள் நடைபெறவுள்ளது. இந்தபயிற்சிமுகாமில் 18 வயதிற்குட்பட்டமாணவ / மாணவிகள் கலந்துகொள்ளலாம். சென்னை மாவட்ட விளையாட்டு அரங்கம் நேரு பூங்காவில் - தடகளம், இறகுபந்து ஆகிய விளையாட்டுகளும் செனாய் நகர் நீச்சல் குளத்தில் இறகுபந்து விளையாட்டும்

35
Sports training for students

விளையாட்டு பயிற்சி முகாம்

முகப்பேர் விளையாட்டு அரங்கத்தில் இறகுபந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளும், கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி, கோபாலபுரத்தில் குத்துச்சண்டை விளையாட்டும். மேலும் நவீன விளையாட்டு அரங்கங்களான ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம். பெரியமேட்டில் தடகளம்.குத்துச்சண்டை ஜூடோ ஃபென்சிங், கையுந்துபந்து பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளும், ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், பெரியமேட்டில் கையுந்து பந்து, குத்துச்சண்டை, தடகளம், கால்பந்து, மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளும்.

45
sports training for students

எந்த எந்த விளையாட்டு பயிற்சி

AGB விளையாட்டு அரங்கத்தில் இறகுபந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், டைவிங்க் ( நீச்சல் தெரிந்தவர்களுக்கு மட்டும்) ஆகிய விளையாட்டுகளும், மேயர் இராதாகிருஷ்ணன் வளைகோல்பந்து விளையாட்டு அரங்கம்,எழும்பூரில் வளைகோல்பந்து விளையாட்டும். டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நுங்கம்பாக்கத்தில் டென்னிஸ் விளையாட்டும் புதூர் மாணவர் விளையாட்டு விடுதியில்- மட்டைபந்து விளையாட்டும் தகுந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படும்.

55
tamilnadu government

இலவச விளையாட்டு பயிற்சி முகாம்

இந்த கோடைக்கால பயிற்சி வகுப்புகளில் விருப்பமுள்ள திரளான மாணவ மாணவிகள் பங்கேற்றுபயன்பெறலாம். மேலும் இப்பயிற்சி முகாமானது முற்றிலும் இலவசமாக நடைப்பெற்று பயிற்சியின் இறுதி நாளில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இது தொடர்பான இதர விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (7401703480) தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories