திட்டமிட்டப்படி துணைவேந்தர்கள் மாநாடு.! திமுக அரசை மீண்டும் டென்சனாக்கும் ஆளுநர் ரவி

Published : Apr 22, 2025, 01:50 PM IST

தமிழக ஆளுநர் ரவி, தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில், தேசிய கல்விக்கட்டமைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.

PREV
15
திட்டமிட்டப்படி துணைவேந்தர்கள் மாநாடு.! திமுக அரசை மீண்டும் டென்சனாக்கும் ஆளுநர் ரவி

Tamilnadu Vice-Chancellors Conference : தமிழக ஆளுநர் ரவிக்கும்- தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது. கல்லூரி நிகழ்வுகளில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பேசுவது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது என அடுத்தடுத்து தமிழக அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில், ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், ஆளுநர் ஒப்புதல் கொடுக்காத 10 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளித்தது.
 

25
Higher Education

வேந்தராக ஆளுநரே தொடர்கிறார்

இதன் காரணமாக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது.மேலும் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பும் ஆளுநரிடம் இருந்து முதலமைச்சருக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்த ஆளுநர் மாளிகை வட்டாரம் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே தொடர்கிறார் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி ஏற்பாடு செய்துள்ளார்.  இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில்,

35
Higher Education

துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு

தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26, 2025 தேதிகளில் ஆளுநர் மாளிகை உதகமண்டலத்தில் தொடர்ந்து 4-வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஜக்தீப் தன்கர், இந்திய குடியரசு துணைத்தலைவர், முதன்மை விருந்தினராக கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து ஏப்ரல் 25, 2025 அன்று துணைவேந்தர்கள் மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.  ஆர்.என்.ரவி  தமிழ்நாடு ஆளுநர்-தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளார்கள். துணை வேந்தர்கள் மாநாட்டின் நோக்கம்,

45
Vice Chancellors Conference

மாநாட்டில் முக்கிய அம்சம்

தேசிய கல்விக்கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்விசார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறவின் பயன்பாடு, கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, ஆராய்ச்சி சிறப்பம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் திறன் வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் தொழில் குறித்த விரிவான விவாதங்கள் மற்றும் கலந்தாய்வு அமர்வுகள் இம்மாநாட்டில் நடத்தப்படவுள்ளன. கல்வித்துறை, அரசு மற்றும் தொழிற்துறையைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் மேற்கண்ட தலைப்புகளில் உரையாற்றவுள்ளார்கள்.
 

55
Tamilnadu Vice-Chancellors Conference

மாநாட்டின் நோக்கம் என்ன.?

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் அவர்கள் 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகள்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்.  இம்மாநாடு தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களின் துணைவேந்தர்களை ஒன்றிணைத்து பணியாற்றுவதையும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதையும், உயர்கல்விக்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories