சென்னையில் சொந்த வீடு விலை இவ்வளவு தானா.? தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி.?

First Published | Sep 29, 2024, 11:13 AM IST

தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரியம் மூலம் குறைந்த விலையில் வீடுகளை விற்பனை செய்கிறது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மானிய விலையில் வீடுகள் கிடைக்கும். ஆன்லைனில் விண்ணப்பிக்க https://tnuhdb.org.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

பொதுமக்களின் சொந்த வீடு கனவு

சொந்த வீடு என்பது அனைவரின் கனவாகும், வீடு இல்லாதவர்கள் வாடகைக்கு வீடி தேடி அலைவதே பெரிய காரியமாகும். அதுவும் வாடகைக்கு வீடு கிடைத்தால் பல வித நிபந்தனைகள் விதிக்கப்பட்டும். ஒரு வீட்டில் 2 பேர் தான் இருக்க வேண்டும், குழந்தைகள் இருக்க கூடாது. உறவினர்கள் வரக்கூடாது.

இரவு 9 மணிக்கு கேட் மூடப்படும். வாடகை ஒரு பகுதி என்றால் பராமரிப்புக்கு தனி கட்டணம், தண்ணீருக்கு தனி கட்டணம் என மாதம் , மாதம் வாங்கும் சம்பளமே முழுவதுமாக வாடகைக்கே சென்று விடும். எனவே குடும்பத்தில் மற்ற செலவிற்கு கடன் வாங்கும் நிலை தான் உருவாகும். எனவே சொந்த வீட்டில் வசிக்க வேண்டும். வாடகை பிரச்சனை இருக்கவே கூடாது என ஏழை, எளிய மக்களின் கனவாக இருக்கும்.
 

Apartment

சென்னையில் வாடகை எவ்வளவு தெரியுமா.?

அந்த வகையில் தமிழக அரசு சார்பாக குடிசை மாற்று வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரியம் சார்பாக குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு வசதி வாரியம் சார்பாக குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு ஏற்ப விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது.

குறிப்பாக தேனாம்பேட்டை, நந்தனம், கிண்டி, அண்ணா நகர் போன்ற பகுதிகளில் ஒரு ரூம் உள்ள வீட்டின் வாடகை 12 ஆயிரம் ரூபாய் முதல் 20ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுவே இரண்டு மற்றும் 3 ரூம்கள் என்று பார்த்தால் 20ஆயிரம் மூதல் 40ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம் சார்பாக சென்னையில் பல இடங்களில் அபார்ட்மெண்ட்கள் கட்டி குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகிகப்பட்டு வருகிறது. .

Tap to resize

தமிழக அரசின் வீடு

அதுமட்டுமில்லாமல் தனி வீடு என்ற திட்டத்தின் கீழ் நிலமாகவும் வி்றபனை செய்யப்படுகிறது. எனவே தங்களது ஊதியத்திற்கு ஏற்ப வீடுகளை வாங்கி கொள்ள முடியும். தனியார் நிறுவனங்களை விட குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரப்பகுதியில்  குடிசைப்பகுதிகளில் வாழ்வதற்கு தேவையான, பாதுகாப்பான குடிநீர், மின்சாரம், திடக்கழிவு அகற்றுதல் அடிப்படை வசதிகள் குறைவாக போதிய வசதிகள் இல்லாத சூழ்நிலை நிலவுகின்றது.

இவர்களுக்காக தமிழக அரசு சார்பாக குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. குடிசைப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேறநகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டி மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி வாரியம் உருவாக்கப்பட்டது. இதன் பெயர் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றப்பட்டது.  

House Rent

400 சதுர அடியில் வீடுகள்

நகர்ப்புறப் பகுதிகளில் ஆட்சேபணையற்ற, நெருக்கமான குடிசைப்பகுதிகளில் குடும்பங்களுக்கும் மற்றும் வாழும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினைச் சார்ந்த குடும்பங்களுக்கும் அதே இடங்களிலும் அல்லது மாற்றிடங்களிலும் புதியதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இக்குடியிருப்புகளில் குடிநீர் விநியோகம், கழிவு நீரகற்றுதல், சாலைகள், தெரு மின்விளக்குகள், மழைநீர் வடிகால் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றன.

 இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.இந்த நிலையில், ஏழை மற்றும் குடிசை வாழ் மக்களுக்கு மிக குறைந்த விலையில் வீடுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் 425 சதுர அடி உள்ள வீடுகள் சுமார் 30 முதல் 40 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் ஒரு படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை வசதியுடைய வீடானது வெறும் ரூ.6.73 லட்சத்தில் பெற்று விடலாம்.

மத்திய, மாநில அரசின் மானியம் என்ன.?

அந்த வகையில் தமிழகம் முழுவதும்  62 திட்டங்களில் 22,049 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்வதற்கு பட்டியலிடப்பட்டுள்ளன. எனவே ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு சார்பாக ஒரு லட்சத்து 50ஆயிரம் ரூபாயும்,  மாநில அரசின் சார்பாக  7 லட்சத்து 50 ஆயிரம் முதல் 13 லட்சம் ரூபாய் வரை  மானியம் வழங்கப்படுகிறது.

மீதமுள்ள பணத்தை வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகள் செலுத்த வேண்டும். வீடுகளின் சதுர அடி மற்றும் இடங்களை பொறுத்து மீதமுள்ள தொகையான 85 ஆயிரம் ரூபாய் முதல்  அதிகபட்சமாக ரூ.10 லட்சம் ரூபாய் வரை  பயனாளிகள் செலுத்த வேண்டும். குறிப்பாக இந்த திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் 3 லட்சம் இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி.?

அந்த வகையில் சென்னை மணலியில் 206 வீடுகள் 7 லட்சம் முதல் 10லட்சத்து 50ஆயிரம் வரை விற்பனை செய்யப்படவுள்ளது. இதே போல திருவள்ளூரில் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும், ஈரோட்டில் 5ஆயிரத்து 100 வீடுகளும், மதுரையில் ஆயிரம் வீடுகளும், தேனியில் 1800 வீடுகளும், கடலூரில் 650 வீடுகளும். நாகையில் 700 வீடுகளும் வேலூரில் 500 வீடுகளும், செங்கல்பட்டில் 280 வீடுகள் உட்பட  தமிழகம் முழுவதும் 22 ஆயிரத்து 049 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்வதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்  https://tnuhdb.org.in/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். 

தேவைப்படும் ஆவணங்கள்

ஆதார் எண் கட்டாயம் மற்றும் குடும்ப வருமான சான்றாக வருடத்திற்கு 3 லட்சமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பவர்கள்  எங்களுக்கு வீடு வேறு எந்த பகுதியிலும் இல்லை என்பதற்காக உறுதிமொழி பத்திரம், விண்ணப்பிப்பவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.
 

Latest Videos

click me!