School Holiday
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே குஷிதான். அதுவும் அக்டோபர் மாதம் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு வரிசை கட்டி விடுமுறை வரும். குறிப்பாக செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அக்டோபர் மாதத்தில் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரிசைக்கட்டி வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பார்ப்போம்.
October Month School Holiday
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து செப்டம்பர் 28ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்கியது. முதலில் காலாண்டு விடுமுறை 5 நாட்கள் மட்டுமே என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், காலாண்டுத் தேர்வு விடுமுறையை நீட்டிக்க வேண்டும். இந்த விடுமுறையில் தான் மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்த வேண்டியுள்ளதால் பள்ளி விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
School Teacher
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை செப்டம்பர் 28-ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறையை நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பதை பார்ப்போம். அதாவது அக்டோபர் மாதத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையே 6 நாட்கள் வந்து விடுகிறது. இதில், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறைகள் அடங்கும்.
Basant Panchami
பின்னர் அக்டோபர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சரஸ்வதி பூஜை வட இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைளில் ஒன்று. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்கள், வங்கிகளுக்கு விடுமுறை. அதேபோல் அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை அன்று விஜயதசமி இது தசரா என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய தினமும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். அக்டோபர் 13ம் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையாகிவிடுகிறது.
Diwali Festival
அக்டோபர் 19ம் சனிக்கிழமை, 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை. அதேபோல், அக்டோபர் 26, 27ம் தேதி சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை வந்துவிடுகிறது. அக்டோபர் 30ம் தேதி தீபாவளி, அதற்கு மறுநாள் 31ம் தேதி நோன்பு என்பதாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகையால் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 31 நாட்களில் 15 நாட்கள் விடுமுறை வந்துவிடுகிறது.