தமிழக பட்ஜெட் 2026 : பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் உடன் சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்!

Published : Aug 05, 2026, 11:04 AM IST

TN Budget 2026: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப் வழங்கப்படும் என பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் மரிய வில்சன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

PREV
14
Tamil Nadu Budget Highlights

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால் கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் மாணவர் நலன் தொடர்பான பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெற்றன. பட்ஜெட் உரையின்போது, அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே பல மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் 2026-27: அண்ணா பிறந்தநாளில் மாமா தரும் தங்க மோதிரம்! துள்ளி குதிக்கும் இளஞ்ஜோடிகள் - யார் யாருக்கு கிடைக்கும்?

24
சூப்பர் கிளீன் - சூப்பர் கேம்பஸ் திட்டம்

கல்வித் துறையில் முக்கிய அறிவிப்பாக, மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 'சூப்பர் கிளீன் - சூப்பர் கேம்பஸ்' திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பள்ளி வளாகங்கள் எப்போதும் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட உள்ளன. திட்டத்தின் முதல் கட்ட செயல்பாட்டிற்காக ரூ.139 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Vijay TVK Party Success: விஜய்யின் அரசியல் எழுச்சிக்குப் பின்னணியில் யார்? சசிகுமார் கொடுத்த நெற்றிப்பொட்டு பதில்!

34
ஹெல்மெட் உடன் சைக்கிள்

மாணவர் நலனுக்காக மேலும் ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் குடிநீர் பாட்டிலுடன் கூடிய சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்துக்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பாடத்திட்ட மறுசீரமைப்புக்காக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி நிதி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது? : பெண்களுக்கு விஜய் அரசு குட்நியூஸ்!

44
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்

உயர்கல்வித் துறைக்கும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்கல்விக்காக ரூ.8,393 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கல்லூரி மாணவர்களுக்காக ரூ.2,000 கோடி மதிப்பில் 'வெற்றி மடிக்கணினி திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது.அதேபோல், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை விரிவுபடுத்த கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.90 கோடி செலவில் 5 புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ITI) அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி, மாணவர் நலன் மற்றும் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளதால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுகவுக்கு விஜய் வைத்த செக்! 16 தொகுதிகளில் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்..அலறும் அறிவாலயம்!

Read more Photos on
click me!

Recommended Stories